Thursday, February 4, 2010

ஆயிரத்தில் ஒருவன் - Hollywood கோப்பையில் சாக்கடை நீர்


Hollywood Factory'ல் வெளியேறும் கழிவுகளைக்கொண்டு ஒரு கோப்பை செய்து, அதில் சாக்கடை நீரை வடித்து, வாடை மறைக்க கொஞ்சம் Vodka'வையும் கலந்து முகம் சுழிக்காமல் குடியுங்கள் என்கிறார் இயக்குனர்.

Gladiator'ல் கொஞ்சம், Lord of the Rings'ல் கொஞ்சம், Troy'ல் கொஞ்சம், Last Samurai'ல் கொஞ்சம், Davincy Code'ல் கொஞ்சம் என்று வெட்டி, ஒட்டுவதற்க்கு தன்னுடைய சரக்கான பொறுக்கித்தனத்தையும் காம வக்கிரத்தையும் சேர்த்துவிட்டால் அது படைப்பாகிவிடுமா?

படம் தொடங்கியவுடனேயே தொடங்குகிறது கதாநாயகனின்(?) பொறுக்கித்தனம். அப்படியே பருத்திவீரன் அமீரின் சாயலில். பொறுக்கித்தனம்தான் நாயகத்தனம் என்று உணர்த்துவதில் சற்றும் இளைக்காதவர் நம்ம இயக்குனர். இவரின் படத்தில் காமமும் பொறுக்கித்தனமும் இல்லாமலா. எதிர்பார்த்ததே. எனவே நெருடல் அதிகம் இல்லை.

சற்று நேரத்திற்க்குப்பின்னரெல்லாம் தொடங்கிவிடுகிறது இயக்குனரின் 'தமிழில் Hollywood - மாதிரி பட' ஆசை. மொத்த ஆதிவாசிக்கூட்டத்தையும் சற்றும் இரக்கமே இல்லாமல் சுட்டுத்தள்ளுகிறது இக்கால நவீன பாண்டிய கூட்டம். ஒரு அமைச்சரும், ஒன்றிரண்டு மிலிட்டரி ஆபீசர்களும் சேர்ந்தால் இவர்களுக்கு இவ்வளவு அதிகாரம் கிடைத்துவிடுமா? அதுவும் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியின் பொருட்டுச் செல்லும் போது? நவீன பாண்டியர்களின் வில்லத்தனத்தை காட்டுவதை விட, காட்டுவாசிகளின் உயிரையெல்லாம் மயிர் போலே கருதுவதில் தப்பில்லை என்ற இயக்குனரின் எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

குளிருக்கு இதமாக இருக்கவேண்டும் என்று இரண்டு நாயகிகளும் கதாநாயகனைக் ஆளுக்கு ஒருபுரம் கட்டிக்கொள்கிறார்களாம். ஏன் நாயகனை தனியே விடுத்து நாயகிகள் இருவரும் மட்டும் கட்டிக்கொண்டால் குளிர் அடங்காதா? முத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களை இந்த அளவுக்கு யாரும் கேவலப்படுத்தியிருக்க முடியாது. பாண்டிய வம்சாவழியில் வந்த ரீமா சென்னிக்கு அவரின் தாய் அவரின் உடம்பை (காம)ஆயுதமாக பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். சோழமன்னன் எங்கோ ஒரு தீவிற்க்குச்சென்று அப்படியே எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்கிறானாம். எவனோ ஒரு பொறுக்கி தன்னைக்காப்பாற்ற வருவான் என்று. கற்பனைக் கதை என்று Disclaimer போட்டுவிட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் போலும்.

Logic என்பதை பார்ப்பவர்களாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு படத்திற்க்கு No சொல்லிவிடலாம். படத்தின் ஒவ்வொரு அடியிலும் அதனைத்தேடவேண்டும். தங்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்ககூடாது என்று ஏழு தடைகள் செய்த சோழர்களுக்கு சோத்துக்கு கூட வழியில்லையாம். அத்துனை மந்திர சக்திகளையும் பயன்படுத்துபவர்கள் நவீன பாண்டியர்களின் துப்பாக்கிக்கு அற்பமாக இரையாகிறார்களாம். ஒருசில நேரங்களில் தீவில் தங்கியிருக்கும் சோழர்களை மந்திரவாதிகள் போலவும் ஒருசில நேரங்களில் மந்திரசக்திகளை தொலைத்துவிட்டு நிற்கதியற்று நிற்பவர்கள் போலவும் காட்டியிருப்பது ஒரு எழவும் விளங்கவில்லை. ஆன்ட்ரியாவெல்லாம் எதுக்கு படத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. பாட்டுக்குத்தான் வேண்டுமென்றால் நாயகனின் கணவுக்காட்சியாக வைத்திருக்கலாம். மேலும் அத்துனை பேரையும் வாட்டி வதைக்கும் பாண்டிய கூட்டம் ஆன்ட்ரியாவை மட்டும் ஏன் விட்டு வைக்கிறது? சோழர்கள் ஆன்ட்ரியாவுக்கு ஏன் அலங்காரம் செய்கிறார்கள். அவர் ஏன் தேவையில்லாமல் பல காட்சிகளில் இங்கும் அங்கும் அலைகிறார்? மைதானத்தில் gladiator copy சண்டை நடக்கும் போது ஏன் எல்லோரும் பைத்தியம் மாதிரி அலைகிறார்கள். ஏன் சில நேரங்களில் அனைவரும் காணாமல் போகிறார்கள், எலும்புக்கூடாகத்தெரிகிறார்கள்? ஏன் பாண்டிய வம்சாவளியில் வந்த ரீமா சென் தெலுங்கில் பாடவேண்டும்... இப்படி இன்னும் பல 'ஏன்' களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒருவேளை புலிசின்னம் பொரித்த சோழர்களை ஈழத்-த்தமிழர்களுக்கு ஒப்பானவர்களாகவும், மிலிட்டரி கமாண்டர்களை இந்திய/இலங்கை இராணுவமாகவும் சித்தரிக்க முயன்றாரோ என்னவோ... அப்படியில்லாதவரை மகிழ்ச்சி.. அப்படியிருந்தால் இயக்குனரே நீங்கள் சோழ, பாண்டியருடன் ஈழத்தமிழர்களையும் மிகக் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்... முக்கியமாக படம் பார்க்கவந்த பார்வையாளர்களை நன்றாக கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.

Sex படம் எடுக்கும் இயக்குனர்கள் பொதுவாக கதை திரைக்கதை மற்றும் தொழில் நுட்பத்தில் சரியாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இவை அனைத்துடன் கூடிய சிறந்த முழு நீள sex படத்தை இயக்கும் தகுதி தனக்கு இருக்கிறது என்பதை தனது முதல் சில படங்களிலேயே உணர்த்தி மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெற்றுவிட்ட இயக்குனர், அதே பாதையில் பயனித்திருந்தால் கவலையில்லாமல் கல்லாவை நிறைத்திருக்கலாம். ஊரான் பணம் தானே ஏதாவது செய்து பார்கலாம் என்று விளையாண்டுவிட்டார் போலும்.

இயக்குனருக்கு இன்னுமொரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து படத்தை முழுவதும் எடுத்து முடித்தபின் வெளியிடவும். மீதிப்படத்தை எப்போது வெளியிடுவீர்கள்?

Disclaimer: இந்த பதிவில் வரும் சாடல்கள் அணைத்தும் எனது கற்பனையே. இது செல்வராகவனையோ, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தையோ எந்த விதத்திலும் சுட்டிக்காட்டுவது அல்ல....  எப்பூடீ...:)