Friday, November 6, 2009

சாதிச்சிட்டொம்... சாதிச்சிட்டோம்...!!

கொஞ்ச நாள் முன்னாடி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசிட்டிருந்தேன்... பல வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னா வேலை செஞ்சோம்..

அப்ப PMC Softwares'ன்னு ஒரு நிறுவனத்துல வேலை செஞ்சோம்... எங்களுக்கு சம்பளம்ன்னு ஒன்னும் கிடையாது. எப்படா சம்பளம் போட்டு தருவாங்கன்னு தெனமும் கனவு கண்டுட்டு இருப்போம். எங்க அரையில சமைக்கிரதால தினமும் நான் சாப்பாடு கொண்டுட்டு வருவேன். அத ரெண்டு பேருமா சாப்பிடுவோம். அப்புறம் அவன் என்ன ஒரு பெட்டி கடைக்கு கூட்டிட்டு போவான். அங்க அவனோட மதிய உணவான வாழை பழத்தை ஆளுக்கு ஒன்னா சாப்பிடுவோம். அப்புரமா கொஞ்ச நாள்ல அவன் Ramco Systems'ல சேர்ந்தான். அவன் தான் எனக்கும் அங்க வேலை வாய்ப்பு பத்தி சொன்னான். அப்புறம் நானும் Ramco'ல சேர்ந்த்துட்டேன். அப்படி அப்படியே இப்ப அவன் சிங்கப்பூர்ல இருக்கான், நான் பெங்களூர்ல இருக்கேன்.

அதே சிங்கப்பூர்ல செட்டில் ஆன ஒரு பிலிப்பினோ பெண்ண கல்யாணம் பன்னிக்க இருக்கிறதா எனக்கு பத்திரிக்கை அனுபிச்சிருந்தான்.. ரொம்ப மகிழ்ச்சியா தான் இருந்தது... அப்போ அடிக்கடி அவன் சொன்ன வார்த்தை நாம சாதிச்சிட்டோம்.. நாம சாதிச்சிட்டோம்னு...

ஆரம்ப காலங்கள்ள எனக்கும்... இப்பவும் என்ன சுத்தி இருக்கிற நண்பர்கள் பலருக்கும் பொதுவா இருக்கிற எண்ணம் நாம வாழ்கைல சாதிச்சிட்டோம்னு...

சாப்பாடுக்கே சிங்கி அடிச்சிட்டு.. மெஸ் பில் கட்ட முடியாம... நல்ல டிரஸ் எடுக்க வக்கில்லாம இருந்திட்டு இப்ப 5 நட்சத்திர உணவகத்திலே Buffet சாபிடரத நெனச்சா அப்படி என்னம் வர்றது இயற்கை தான்... ஆனா நாம என்ன பெருசா என்ன சாதிச்சிட்டோம்னு எனக்குள்ளயே கேக்கரப்போ... ஒன்னும் இல்லைன்னு தான் பதில் வருது.... என்னோட நண்பன் ஒருத்தன் physics படிச்சான். சொந்த ஊரான கரூர்லயே teacher வேலை... நேரா நேரம் அம்மா கையால சோரு... அடிக்கடி ஆப்பம் பாலுன்னு பலகாரம், அண்ணன் புள்ளைங்களோட தெனமும் வெளயாட்டு... நோம்பி வந்தா சொந்த்தகாரங்க வீடு.. முனியப்பன் கோயில் கெடா வெட்டு... bajaj c.t 100 வண்டி... தெரந்த வாசல்ல தென்ன மரம் வெச்ச சொந்த வீடு... பொருளாதார முன்னேற்றம்னு கணக்கு போட்டா கூட இங்க நான் வாங்கற சம்பளத்துல அத்தனையும் செஞ்சுக்கரதுக்கு வாழ் நாள் பூரா வேல செய்யனும் போல இருக்கு...


ஏதோ அடிக்கிற Globalization காத்துல உயரப் பறக்கிற குப்பை கூளத்துல நாமளும் ஒருத்தன்னு தான் எனக்கு எண்ணம் வருதே தவிர பெருசா ஒன்னும் சாதிச்ச மாதிரி எண்ணம் வர மாட்டேங்குது.. ஹ்ஹ்ஹ்ஹூஹூம்ம்.... காத்து எப்ப நிக்குமோ குப்பை எப்ப கீழே விழுமோ....?

6 comments:

நவீனன் said...

//ஏதோ அடிக்கிற Globalization காத்துல உயரப் பறக்கிற குப்பை கூளத்துல நாமளும் ஒருத்தன்னு தான் எனக்கு எண்ணம் வருதே தவிர பெருசா ஒன்னும் சாதிச்ச மாதிரி எண்ணம் வர மாட்டேங்குது..//

அன்பு,
மென்பொருள் துறையில் இருக்கும் அனேகம் பேருக்கு இதே எண்ணம் தான் இருக்கும். Anywayz...ஒரு நல்ல தொடக்கம். உங்களது கிறுக்கல்கள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

Muthu said...

nalla irukku continue pannunga

all the best

anbudan
Marimuthu K
bangalore

MavinPros said...

மண் மனத்தோட இருக்கர உங்க slang ரொம்ப நல்லா இருக்கு.. கூடவே உண்மையும் பிடிச்சிருக்கு.. keep sharing அண்ணா - பாரதி

Siva said...

படிக்க நல்லா இருக்கு... கோர்வையாக இருக்கு

லிங்காபுரம்-சிவா said...

என்னுடைய எண்ணங்களை...இங்கு உங்கள் எழுத்து வடிவில் பார்க்கிறேன்..!

"நவீனன் said...
//ஏதோ அடிக்கிற Globalization காத்துல உயரப் பறக்கிற குப்பை கூளத்துல நாமளும் ஒருத்தன்னு தான் எனக்கு எண்ணம் வருதே தவிர பெருசா ஒன்னும் சாதிச்ச மாதிரி எண்ணம் வர மாட்டேங்குது..//

அன்பு,
மென்பொருள் துறையில் இருக்கும் அனேகம் பேருக்கு இதே எண்ணம் தான் இருக்கும். Anywayz...ஒரு நல்ல தொடக்கம். உங்களது கிறுக்கல்கள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்"

நவீனன் சொன்னது சரிதான்...

அன்புசிவம் said...

லிங்காபுரம்-சிவா.. திரும்பவும் இந்த பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தால் உங்களோட மின்னஞ்சல் முகவரியை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்..

Post a Comment

உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள...